“சாலையின் குறுக்கே வந்த மாடு” விவசாயிக்கு நடந்த கொடுமை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள சிறுகுடல் கிராமத்தில் விவசாயி செல்வராஜ் வசித்து வந்துள்ளார். இவர் வேலை காரணமாக தனது இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது எதிர்பாராதவிதமாக இவரது இரு சக்கர வாகனம் மோதி உள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த செல்வராஜ் படுகாயமடைந்தார்.

பின்னர் அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டா இதுகுறித்து செல்வராஜின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *