லாரி கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்திலிருந்து ஜவுளி பாரம் ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை குல்தீப் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் லாரி தர்மபுரியை கடந்து தொப்பூர் கணவாய் சென்று கொண்டிருந்தது. அப்போது 3-வது வளைவை லாரி கடக்க முயன்றுள்ளது. இதனையடுத்து கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி கழுதை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கித்தவித்த ஓட்டுநர் குல்தீப் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் அவ்வழியாக சென்றவர்கள் இந்த விபத்து குறித்து தொப்பூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குல்தீபின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.