சரக்கு ஆட்டோ – பைக் மோதல்…. கோர விபத்தில் பறி போன உயிர்…. அரியலூரில் நடந்த சோகம்….!!!

சரக்கு ஆட்டோ – பைக் மோதிய விபத்தில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் ஓட்டுநர் செல்வ முத்துக்குமரன் வசித்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ இவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வமுத்து குமரனின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த ஓட்டுநர் முருகானந்தம் என்பவரை கைது செய்து செய்தனர். மேலும் மருத்துவமனையில் அவருக்கு நடத்திய சோதனையில் மது அருந்திவிட்டு வண்டி ஓட்டியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *