“லாரி நேருக்கு நேர் மோதல்” கோர விபத்தில் பறி போன உயிர்…. கரூரில் நடந்த சோகம்….!!!

லாரி சக்கரத்தில் சிக்கி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள மணியனூர் பகுதியில் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர் ராஜா உடன் லாரியில் சென்றுள்ளார். அப்போது ராஜா லாரியை ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சேலத்திலிருந்து கரூர் நோக்கி வந்த கண்டெய்னர் லாரி மீது ராஜா ஓட்டி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ராஜா படுகாயம் அடைந்துள்ளார். மேலும் பாபு லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாப்பிரெட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *