உறவினரை பார்க்க சென்ற வாலிபர்… நடந்த அதிர்ச்சி சம்பவம்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் என்ஜினியர் பட்டதாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஒர்க்ஷாப் நடத்தி வந்துள்ளார். இவருக்கு என்ஜினீயரிங் பட்டதாரியான அஜின் என்ற மகன் உள்ளார். இவர் தனது தந்தைக்கு உதவியாக அவரது கார் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அஜின் நாகர்கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

அப்போது இவர் களியங்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அஜின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி டிரைவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *