பிக்கப் வேன்-பைக் மோதல்…. கோர விபத்தில் பறி போன உயிர்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!

இருசக்கர வாகனத்தின் மீது பிக்கப் வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள புதூரில் திருஞானம், பூபேஷ் குப்தா, பெருமாள்சாமி ஆகிய 3 பேர் வசித்து வந்துள்ளனர். இதில் பெயிண்டர்களான இவர்கள் 3 பேரும் சொந்த வேலை காரணமாக இரு சக்கர வாகனத்தில் வந்து விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையை கடக்க முற்படும் போது அந்த வழியாக வந்த பிக்கப் வேன்  இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயமடைந்ததை தொடர்ந்து பெருமாள்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் மற்ற 2 பேரை  மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெருமாள்சாமி உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த திருஞானம், பூபேஷ் குப்தா ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

இதனால் அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூட்டு ரோட்டில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதால் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரிகளிடம் கூறினர். பின்னர் இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறையினர் உறுதியளித்தனர். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *