மொபட் மீது மோதிய கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் லாரி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாலாடைகட்டளை பகுதியில் இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிப்பர் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாயாண்டி கயத்தாறில் உள்ள குவாரியில் டிப்பர் லாரியை விட்டு விட்டு மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த கார் மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த மாயாண்டியை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாயாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கயத்தாறு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.