லாரி-அரசு பேருந்து மோதல்…. 22 பேருக்கு நடந்த கொடுமை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

லாரி-அரசு பேருந்து மோதிய விபத்தில் 22 பேர் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் அரூரிலிருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஓட்டுனர் மாது என்பவரும், கண்டக்டராக சேது என்பவரும் இருந்துள்ளனர். இந்நிலையில் சிமெண்ட் கல் ஏற்றிக்கொண்டு வந்த லாரியும் பேருந்தும் மோதி கொண்டன. இந்த பேருந்தில் ஓட்டுனர் மாது, லாரி ஓட்டுனர் செந்தில், அழகரசன் உள்ளிட்ட 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து படுகாயம் அடைந்தவர்களுக்கு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சேலம்,தர்மபுரி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *