“கட்டுப்பாட்டை இழந்த லாரிகள்” ஓட்டுனர்களுக்கு நேர்ந்த கொடுமை…. தர்மபுரியில் நடந்த சோகம்….!!!

லாரிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சேலத்திலிருந்து மாட்டு தீவனம் ஏற்றிக்கொண்டு தர்மபுரி நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை தர்மபுரி மாவட்டம் ஆரியமங்கலம் பகுதியை சேர்ந்த அமீர் என்பவர் ஓட்டியுள்ளார். இந்நிலையில் லாரி நல்லம்பள்ளி அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அதியமான் கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதைப்போல கோவையிலிருந்து அரவை இயந்திரம் ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரி நல்லம்பள்ளி அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் மணிமாறன் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சுங்கச்சாவடி ரோந்து படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஓட்டுனரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து இரண்டு லாரிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சேலம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் சுங்க சாவடி ரோந்து படையினர் விபத்துக்குள்ளான இரண்டு லாரிகளையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த அதியமான்கோட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *