நிலக்கடலை ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளார்.
ஆந்திர மாநிலத்திலிருந்து சேலம் மாவட்டத்திற்கு நிலக்கடலை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டு உள்ளது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலை லாரி தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொப்பூர் கணவாய் வளைவை கடந்துள்ளது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓட்டுநர் பிரகாஷ் படுகாயம் அடைந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகாஷை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சாலையில் கவிழ்ந்த லாரி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.