டிரைவரை தாக்கி கழிவுநீர் லாரியை வாலிபர் ஓட்டி சென்றதால் திருமண மண்டபம் சுவர் இடிந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கண்டிகை பகுதியில் சம்பத் குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கழிவுநீர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது 5 மர்ம நபர்கள் சாலையின் நடுவே காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். இதனை சம்பத்குமார் கண்டித்துள்ளார். ஆகவே இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த மர்ம கும்பல் சரத்குமாரை தாக்கியுள்ளனர். அதுமட்டுமல்லாது மர்ம கும்பலை சேர்ந்த ஆகாஷ் என்ற வாலிபர் கழிவுநீர் லாரியை தாறுமாறாக சாலையில் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அருகில் இருந்த திருமண மண்டபத்தில் லாரி மோதி சுவர் இடிந்துள்ளது. இதுகுறித்து தனியார் திருமண மண்டப உரிமையாளர் மற்றும் லாரி ஓட்டுனர் திருவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.