“குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா” வழியில் நேர்ந்த அசம்பாவிதம்…. தஞ்சையில் நடந்த சோகம்….!!!

சுற்றுலா சென்று வந்த 20 பேருக்கு விபத்து ஏற்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து 20-க்கும் மேற்பட்டோர் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி சுற்றுலா பேருந்தில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணிக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தஞ்சை மாவட்டத்திலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சுற்றுலா பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் வெங்கட்ராஜ் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.

அதேபோல சுற்றுலா பேருந்தில் வந்த ஓட்டுனர் முரளி உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வழியாக சென்றவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தஞ்சாவூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *