“நடைபெற்ற சகோதரி திருமணம்” சகோதரனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

இருசக்கர வாகனம் கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் தெற்கு கரும்பனூர் சர்ச் தெருவில் மதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது சகோதரியின் திருமணத்திற்கு வந்த நண்பர் ஒருவரை ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் தெற்கு கரும்பனூர் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது மலைக்கோயில் அருகே சென்று கொண்டிருக்கும் போது தென்காசியிலிருந்து வந்த கார் எதிர்பாராதவிதமாக இவரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கார் ஓட்டுநர் சரவணனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *