“குடும்பத்தினருடன் திருநள்ளாறு கோவில் தரிசனம்” 16 பேருக்கு நேர்ந்த கொடுமை…. கடலூரில் நடந்த சோகம்….!!!

வேன் கவிழ்ந்த விபத்தில் 16 பேர் படுகாயமடைந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கூலித் தொழிலாளியான ஆனந்த் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் பக்கத்து ஊரை சேர்ந்த உறவினர்களுடன் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்து ஒரு வேனில் புறப்பட்டுள்ளனர். இந்த வேனை கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் பகுதியை சேர்ந்த பவித்ரன் என்பவர் ஓட்டியுள்ளார். இந்நிலையில் வேன் கடலூர் முதுநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது வேன் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்திலிருந்த பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதுபற்றி தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த காயங்களுடன் சிக்கியிருந்த அரவிந்தன், ஷாலினி, வளர்மதி, பெருமாள் உள்ளிட்ட 16 பேரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் ஆனந்த் என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். பின்னர் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *