சாலையின் குறுக்கே வந்த நாய்…. முதியவருக்கு நேர்ந்த விபரீதம்…. திருவள்ளூரில் நடந்த சோகம்….!!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்த விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் மகேந்திர பிரசாத் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது மாமனார் கண்ணய்யா ராஜாவை ரயில் நிலையத்தில் விடுவதற்காக சென்று கொண்டு இருந்தார். அப்போது சாலையின் குறுக்கே திடீரென நாய் ஒன்று வந்துள்ளது. இதில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் கண்ணையா ராஜாவுக்கு பலத்த காயமும், மகேந்திர பிரசாத்திற்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கண்ணய்யா ராஜா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *