தாறுமாறாக ஓடிய கார்…. கோர விபத்தில் பறி போன உயிர்கள்…. காஞ்சியில் நடந்த சோகம்….!!!

பாறை மீது கார் மோதிய விபத்தில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் சிவராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவரும் திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் டெல்லி, மனோகரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் 3 பேரும் ஒரு காரில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது சிவராஜா காரை ஓட்டினார். இந்நிலையில் பொன்னாகவுண்டனூர் பிரிவு அருகே கார் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்து பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்து சிவராஜ், மனோகரன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வழியாக சென்றவர்கள் டெல்லியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவராஜ் மற்றும் மனோகரனின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *