“பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து”15 பக்தர்கள் காயம்…. தி. மலையில் நடந்த சோகம்….!!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கீழ்நெடுங்கள் பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தனியார் பேருந்து ஒன்றில் திருவண்ணாமலை வந்தவாசி வழியாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். இப்பேருந்தை ஆந்திர மாநிலம் சித்தூர் பாலாஜி நகரை சேர்ந்த தினேஷ் என்பவர் ஓட்டியுள்ளார். இந்நிலையில் வந்தவாசி – மேல்மருவத்தூர் சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஓட்டுநர் தினேஷ் பேருந்தில் பயணம் செய்த உஷா, வைடூரியம், அம்பிகா உள்ளிட்ட 15 பக்தர்கள் காயமடைந்துள்ளனர். இதனை பார்த்த வழியாக சென்றவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சை 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் தினேஷ், உஷா, வைடூரியம் ஆகிய 3 பேர் மேல் சிகிச்சைக்காக மேல்மருவத்தூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த வந்தவாசி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.