தந்தையின் சாவிற்கு சென்ற மகள்…. மகனுக்கு நேர்ந்த விபரீதம்…. மதுரையில் நடந்த சோகம்….!!!

கார் கண்மாய்க்குள் கவிழ்ந்த விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொளத்தூரில் முகம்மதுநபி – ஹமிதா ஹஸிதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் ஹமிதா ஹஸிதாவின் தந்தை இறந்துவிட்டதால் சென்னையிலிருந்து காரில் திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது மதுரை மாவட்டத்தில் உள்ள கொட்டாம்பட்டி அருகே சென்று கொண்டிருக்கும்போது காரின் குறுக்கே மாடு ஒன்று வந்தது.

இதனால் முகம்மதுநபி சடன் பிரேக் போட்டதில் கார் நிலைதடுமாறி அருகிலிருந்த கண்மாய்க்குள் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் காரில் வந்த முகமது நபி உட்பட அனைவரும் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கொட்டாம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து படுகாயம் அடைந்த மற்ற 3 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கொட்டாம்பட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *