இருசக்கர வாகனம்-பைக் மோதல்…. கோர விபத்தில் பறி போன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் கிருஷ்ணா தனது நண்பர் கரிகாலனுடன் காலனி பகுதியில் உள்ள உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நச்சலூர் அருகே ஒத்தக்கடை – திருச்சி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கிருஷ்ணா மற்றும் கரிகாலனை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் படுகாயமடைந்த கரிகாலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *