“நண்பருடன் வெளியே சென்ற தொழிலாளி” லாரி சக்கரத்தில் சிக்கி பறி போன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி பகுதியில் பரந்தாமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இதில் கட்டிட மேஸ்திரியான இவர் தனது நண்பர் பாலாஜியுடன் வேலை காரணமாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இதில் பாலாஜி இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததால் பரந்தாமன் பின்னாடி அமர்ந்து வந்தார். இந்நிலையில் முன்னாள் சென்ற லாரியை பாலாஜி முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்திலிருந்து இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டனர். இந்த விபத்தில் பரந்தாமன் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி அவர் மீது லாரி ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் பாலாஜி படுகாயமடைந்துள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த விருதம்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரந்தாமனின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த பாலாஜியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *