2 கார்- பஸ் மோதல்…. கோர விபத்தில் பறி போன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!

2 கார் மற்றும் அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜ் தனது நண்பர் பிரகாஷ் என்பவருடன் காரில் கோவையிலிருந்து வந்து கொண்டிருந்தார். அப்போது கரூர்  தேசிய நெடுஞ்சாலை அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த மற்றொரு கார் மற்றும்  அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த யுவராஜ் மற்றும் அவரது நண்பர் பிரகாஷை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து படுகாயமடைந்த பிரகாஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

மற்றொரு காரில் வந்த திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த லோகநாதன் மற்றும் அரசு பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனர் மனோகரன் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *