பைக்-லாரி மோதல்…. வாலிபருக்கு நடந்த கொடுமை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருவக்கரையில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் வேலை காரணமாக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி இவரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியின் முன்பக்க டயரில் சிக்கிக்கொண்ட மணி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து கண்டமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *