“வேலை காரணமாக சென்ற முன்னாள் படைவீரர்” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தஞ்சையில் நடந்த சோகம்….!!!

இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முன்னாள் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் மத்திய தொழிற்படை பாதுகாப்பு படை வீரராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதில் ஜெயராமன் தனது இருசக்கர வாகனத்தில் வேலை காரணமாக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவரின் வாகனத்தில் மோதி  விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜெயராமனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயராமன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த அய்யம்பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *