மினி லாரி – பைக் மோதல்…. வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…. செங்கல்பட்டில் நடந்த சோகம்….!!

இருசக்கர வாகனத்தின் மீது மினி லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கூடுவாஞ்சேரியில் கருப்பசாமி என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடன் பணிபுரிந்து வரும் நண்பர் சேதுராமன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தைலாவரம் அருகே இரு சக்கர வாகனம் சென்று கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த மினி லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கருப்புசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த சேதுராமனை மீட்டு அருகிலுள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின்னர் கருப்பசாமியின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த கூடுவாஞ்சேரி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *