பைக்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறி போன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

இருசக்கர வாகனம்-லாரி மோதிய விபத்தில் நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்திலுள்ள காளையார்பட்டியில் பார்த்தசாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பார்த்தசாரதி வேலை காரணமாக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கோவை-கரூர் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த லாரி இவரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பார்த்தசாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்தி கிராமத்திலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *