சடன் பிரேக் போட்ட மகன்…. தந்தைக்கு நடந்த விபரீதம்…. திருவள்ளூரில் பரபரப்பு….!!!

மின் கம்பத்தில் கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி நகரில் தனியார் நிறுவன ஊழியர் வெங்கடேசன் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகன் மணிகண்டன் மற்றும் ஜெகதீஷ் என்பவருடன் வேலையின் காரணமாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருவள்ளூர் அடுத்த வெள்ளவேடு பகுதியில் கார் சென்று கொண்டிருக்கும் போது திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது.

இதனால் பதறிப்போன மணிகண்டன் சடன் பிரேக் போட்ட போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து காரில் சென்ற ஜெகதீஷ், மணிகண்டன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதனைப் பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் ஜெகதீஷ் மற்றும் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து தகவலறிந்த வெள்ளவேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *