ரயில் மோதி கறி கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள இரட்டை மலை பகுதியில் ஜெயசீலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கறி கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயசீலன் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது ஜோலார்பேட்டை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஜெயசீலன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயசீலனின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.