இருசக்கர வாகனத்தின் மீது டெம்போ மோதிய விபத்தில் பேக்கரி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அழகியமண்டபம் பகுதியில் அமைந்துள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத் வேலை முடிந்தவுடன் வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டெம்போ எதிர்பாராதவிதமாக வினோத்தின் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட வினோத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் வினோத் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.