இருசக்கர வாகனம் நிலைதடுமாறி ஆற்றுப்பாலம் தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியிலுள்ள வில்லியனூர் பகுதியில் சிவமூர்த்தி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சக்திவேல் என்ற மகன் இருந்துள்ளார். இதில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சக்திவேல் தனது சகோதரன் முருகவேலுடன் இருசக்கர வாகனத்தில் உறவினரை பார்க்க சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில் ஆற்றுப்பாலத்தில் இருசக்கர வாகனம் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த இருவரையும் அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து உள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் முருகவேலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.