“நடந்து சென்று கொண்டிருந்த தொழிலாளி” திடீரென நடந்த சம்பவம்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இதில் கூலி தொழிலாளியான இவர் காலனி பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ராமசாமி படுகாயமடைந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்றவர்கள் ராமசாமியை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த வெங்கமேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *