“பேருந்தை முந்த முயன்ற தம்பி” அக்காவிற்கு நடந்த கொடுமை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்திலுள்ள வெள்ளியணை பகுதியில் அருண் குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது அக்கா ப்ரீத்தாவுடன் இருசக்கர வாகனத்தில் கரூர் – திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற தனியார் பேருந்தை முந்த அருண்குமார் முயன்ற போது எதிர்பாராதவிதமாக பேருந்து இவரின் வாகனத்தில் மோதியது. இந்த விபத்தில் அருண் குமாரின் வாகனம் மற்றொரு இருசக்கர வாகனத்திலும் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட பிரீத்தாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் அருண் குமாருக்கும் மற்றொரு வாகனத்தில் வந்த செல்வராணி என்பவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அவ்வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் குறித்து பசுபதிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *