அடுத்த ஆபத்து… “கோமாவை ஏற்படுத்துமாம்”… ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி..!!

கொரோனா பெரும் தொற்றானது முதல் அலை, இரண்டாம் அலை என உருமாற்றம் எடுத்து அடுத்தடுத்த பரிமாணங்களை அடைந்து வருவது உலகம் முழுவதும் கதிகலங்க வைக்கிறது. இந்த வைரஸின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தற்போது நுண்ணுயிரியல் ஆபத்து ஏற்படும் நிலை ஒன்று அமெரிக்காவில் உருவாகியுள்ளது. முதன்முதலாக அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் மூளையை உண்ணும் நுண்ணுயிரியல் தாக்கப் பட்டு 6 வயது சிறுவன் உயிரிழந்தார். உயிரிழந்த சிறுவனின் வீட்டு தோட்டத்தில் உள்ள குழாயில் இந்த அமீபா கண்டுபிடிக்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல் நகரின் பிற பகுதிகளிலும் இது கண்டறியப்பட்டது. தண்ணீர் மூலம் பரவும் இந்த நுண்ணுயிர் தொற்று மனிதர்களின் மூளை மூக்கு வழியாக சென்றடைவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் ஒற்றை தலைவலி, காது வலி, கழுத்து வலி, வாந்தி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும் கோமா நிலைக்குச் சென்று பல்வேறு உறுப்புகள் செயலிழப்பு ஏற்படுத்தி இறுதியில் மரணம் ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அமெரிக்காவின் பல இடங்களில் இந்த கொடிய நோய் பரவி வருவதாக மக்கள் அச்சம் அடைகின்றன. இதுகுறித்து நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொடிய வைரஸ் இன் பாதிப்புகள் இப்போது அதிக அளவில் மத்திய மேற்கு மாநிலங்களை நோக்கி நகர்கின்றன என்ற செய்தி உலகம் முழுவதும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.