அமேசானை காப்பாத்துங்க ”ரூ 88,08,65,000” அள்ளிக்கொடுத்து அசத்திய பிரிட்டன்…!!

அமேசான் காட்டு தீயை அணைக்க 10 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்படும் என்று பிரிட்டன் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது உலகத்தின் நுரையீரல்  என்று வர்ணிக்கப்பட்டும்  அமேசான்  காட்டு தீ குறித்து தான். உலகத்துக்கே 20 சதவீத ஆக்சிஸன் இந்த அமேசான் காடுகளால் மட்டுமே கிடைக்கின்றது. மாறி வரும் பருவநிலை மாற்றத்தால் அமேசான் காட்டு பகுதியில் ஒரு ஒரு மாதமாக தீ பிடித்து அழிந்து வருகின்றது. இந்த தீயை கட்டுப்படுத்த உலக நாடுகள் முன்வர வேண்டுமென்று அனைவரும் கோரிக்கை வைத்தனர். அந்த வகையில் பிரான்ஸ் நாட்டின் பைரியாட்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஜி 7 மாநாட்டில் அமேசான் காட்டு தீ குறித்து பேசப்படும் என்று சொல்லப்பட்டது.


அமெரிக்கா , இந்தியா உட்பட 7 நாடுகளில் உலகநாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில்  கலந்துகொண்டுள்ள பிரிட்டன் அதிபர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமேசான் காட்டுத்தீயினால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பூமியின் ஆக்சிஜன் மையமான அமேசான் காடு நம் கண் முன்னே எரிந்து வருகின்றன. இந்த விபத்தில் இருந்து அமேசான் காடுகளை மறுசீரமைத்து பராமரிக்க பிரிட்டன் அரசு சார்பில் 10 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.இந்திய மதிப்பின் படி இது 88 கோடியே 8 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் ஆகும்.