இதையும் தெரிஞ்சி கோங்க…. இந்திய சுதந்திர தினம்…. யாருக்கும் தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்….!!

இந்திய சுதந்திர தினம் பற்றி நாம் தெரிந்து கொள்ளாத பல சுவாரசியமான விஷயங்கள் இப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளன.

1947-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. நம் முன்னோர்கள் பல தியாகங்கள் செய்து கிடைத்த சுதந்திர தினத்தை நாம் கொண்டாட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

1757 ஆம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்கள் வணிகம் செய்வதற்காக இந்தியாவிற்குள் நுழைந்து “பிரிட்டிஷ் இந்தியா கம்பெனி” என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர். மேலும் அவர்கள் நாட்டில் தயார் செய்யப்பட்ட பல பொருள்களை இந்தியர்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டையே கைப்பற்றி 1858 முதல் இந்தியாவை முற்றிலுமாக பிரிட்டிஷ் அரசின் காலனி நாடாக மாற்றி ஆட்சி செய்ய ஆரம்பித்து இந்தியர்களை அடிமைப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து இதனால் எழுந்த கிளர்ச்சியால் இந்தியர்களுக்கு சுதந்திர தாகம் பிறந்து சுதந்திரம் அடைய பலர் போராட்டம் நடத்தி 1947ல் இந்தியா விடுதலை அடைந்தது. அன்று முதல் இன்று வரை இந்தியா ஒரு ஜனநாயக நாடாக மாறியுள்ளது.

தேசியகீதம்

இந்தியாவின் தேசிய கீதமான ஜன கண மன என தொடங்கும் பாடலை ரவீந்திரநாத் தாகூர் என்பவர் எழுதியுள்ளார். இவர் 1911 ஆம் ஆண்டு எழுதிய “பாரத பாக்ய விதாதா” என்ற பாடல்தான் ஜன கணமன பாடலாக மாறியுள்ளது. மேலும் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி அதாவது குடியரசு ஆவதற்கு இரு தினங்களுக்கு முன்பு இந்த பாடலை தேசிய கீதமாக இந்தியா அங்கீகரித்துள்ளது.

தேசியகொடி

இந்தியாவில் தேசிய கொடி 1906 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி கொல்கத்தாவிலுள்ள பாரீஸீ பாகன் ஸ்கொயர் என்று இடத்தில் ஏற்றப்பட்டது. மேலும் சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று வண்ணங்கள் இருந்த கொடியை 1921 ஆம் ஆண்டு பிங்கிலி வெங்கையா என்பவர் டிசைன் செய்திருந்தார். அதன்பின் இளஞ்சிவப்பு, வெள்ளை பச்சை, நடுவே அசோக சக்கரத்துடன் கூடிய தற்போது உள்ள தேசிய கொடி 1947ஆம் ஆண்டு ஜூலை 22 இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 15 ம் தேதி 1947 ஆம் ஆண்டு ஏற்றப்பட்டது.

விடுதலை

இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த பின்பே பிரிட்டிஷ் அரசு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க முடிவு செய்து லார்ட் மவுண்ட் பேட்டன் என்பவர் ஜூலை 18 ம் தேதி 1947 ஆம் ஆண்டு அறிவித்தார். மேலும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி 1947 ஆம் ஆண்டு முதல் இந்தியாவிற்கு விடுதலை என்று லார்ட் மவுண்ட் பேட்டன் அறிவித்தார்.

தேசியபாடல்

வந்தேமாதரம் என்ற நமது தேசிய பாடலை பக்கிம் சந்திர சாட்டர்ஜி என்பவர் 1880 ஆம் ஆண்டு அவரது புத்தகத்தில் இந்த பாடலை எழுதியுள்ளார். மேலும் இந்த பாடலை 1896 ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூர் முதன் முதலில் பாடி 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி இந்தப் பாடல் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது.

வரைபடம்

இந்தியா சுதந்திரம் அடையும் போதே பாகிஸ்தான் பிரிந்து சென்று விட்டது. அதன் பின் இந்தியாவின் எல்லைகளை கொண்ட மேப் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தயாராக இருந்த போதிலும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி தான் அது வெளியிடப்பட்டது. அதாவது சுதந்திரம் கிடைத்த 2 நாட்களுக்கு பின்பு தான் அதிகாரபூர்வமாக இந்திய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

ரவீந்திரநாத் தாகூர்

ரவீந்திரநாத் தாகூர் என்பவர் இந்தியாவின் தேசிய கீதம் மட்டும் அல்லாது வங்கதேசத்தின் தேசிய கீதத்தையும் எழுதியுள்ளார். மேலும் அவர் எழுதிய “அமர் சோனார் பங்களா” என்ற புத்தகத்தில் உள்ள 10 வரிகள் தான் 1976 ஆம் ஆண்டு வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுமட்டுமல்லாது இலங்கையின் தேசிய கீதமான ஸ்ரீலங்கா மாதா என்ற பாடல் வரிகளும் தாகூரின் தாக்கத்தால் எழுதப்பட்டவையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *