சுதந்திர தின விழாவில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது.
கடந்த பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமாவாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதில் தாக்குதலாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதிகள் முகாமை தாக்கி அழித்தது. இதையடுத்து இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த வேண்டுமென்று பாகிஸ்தான் ராணுவத்தின் F 16 போர் ரக விமானம் வெடி குண்டுடன் நுழைய முற்பட்டதை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது.

மேலும் பாகிஸ்தான் விமானப் படையை இந்திய விமானப் படை விரட்டியடித்தது. அப்போது இந்திய விமானம் ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இதில் இருந்த இந்திய விமானி அபிநந்தன் பாராசூட் மூலம் தரையிறங்கினார். அவர் பாகிஸ்தான் பகுதியில் தரையிறங்கியதால் அவரை அந்நாட்டு ராணுவத்தினர் கைது செய்தனர் .
பின்னர் இந்தியா உட்பட உலக நாடுகள் பல அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது. இதையடுத்து பாகிஸ்தான் அவரை வாகா எல்லையில் ஒப்படைத்தது. அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இவரை இந்தியா முழுவதும் பலரும் பாராட்டினர். இந்நிலையில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு நாளை கொண்டாட இருக்கும் 73-வது சுசுதந்திர தின விழாவில் வீர் சக்ரா விருது வழங்கி கவுரவிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.