அப்துல்கலாம் சகோதரருக்கு அமைதிக்கான பரிசு…. அமெரிக்கா வாழ் தமிழர்கள் நிகழ்த்திய நெகிழ்ச்சி சம்பவம்….!!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு ராமேஸ்வரம் அருகே உள்ள அவரது நினைவு மண்டபத்தில் பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னாள் குடியரசுத்தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் 88வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ராமேஸ்வரம் அடுத்த பேய்க்கரும்பு பகுதியில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் கலாமின் சகோதரர் முத்து மீரா மரைக்காயர் உள்ளிட்ட உறவினர்கள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், ஜனநாயக இடதுசாரி இயக்கங்களும் அஞ்சலி செலுத்தினர். இவர்களை தொடர்ந்து அங்கு வந்திருந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள் கலாமின் சமாதி மீது மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அத்துடன் அப்துல் கலாம் நினைவாக அவரது சகோதரரிடம் அமைதிக்கான பரிசு ஒன்றையும் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *