தீராத வயிற்று வலி…… 80 வயது முதியவர் விஷம் குடித்து தற்கொலை…… காஞ்சியில் சோகம்…!!

காஞ்சிபுரத்தில் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்ட முதியவர் ஒருவர் விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாரணை என்னும் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. 80 வயதாகும் இவர் நீண்ட நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்று வந்தும்  அவரது வயிற்று வலி குறைந்தபாடில்லை வயதான காலத்தில் இப்படி அவதிப்படுவதா என்று நினைத்து நேற்றையதினம் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் கைவிரிக்க,  சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கும் அவர் எவ்வித சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். பின் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட வழக்குப்பதிவு செய்து முதியவர் மரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *