ஆதியும், ஹன்சிகாவும் இணையும் முதல் படம்….!!!!

ஆதியும், ஹன்சிகாவும் முதன்முறையாக ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு, `பார்ட்னர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

எஸ்.பி.கோலி தயாரிப்பில் `பார்ட்னர்’  படம் தயாரிக்கப்பட உள்ளது. இப்படத்தை`டோரா’ படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய மனோஜ் தாமோதரன் இயக்க உள்ளார். இவர், டைரக்டர் சற்குணத்திடம் உதவி டைரக்டராக இருந்தவர்.இப்படம் ஒரு நகைச்சுவைகலந்த  அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய படமாக இருக்கும். அது, ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில்  அதற்கேற்ப படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது .

Image result for ஆதி, ஹன்சிகா

 

இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் ஹன்சிகா நடித்துள்ளார். இப்படம் ஆதிக்கும் முக்கியமான படமாக அமையும் . அவருக்கு ஜோடியாக பாலக் லல்வாணி நடிக்கிறார். படத்தின் அத்தனை கதாபாத்திரங்களும் பேசப்படும். மேலும் இப்படத்தில் யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், வி.டி.வி.கணேஷ், ஜான் விஜய், ரவிமரியா ஆகியோரும் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.