தடுப்பு சுவர் கட்டும் பணி தீவிரம்…. ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்…. நகராட்சி அதிகாரிகள் உத்தரவு….!!

ஆக்கிரமித்து கட்டியிருந்த 6 வீடுகளையும் நகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை நகராட்சி பகுதியில் கழுத்தறுத்தான் பள்ளம் உள்ளது. இந்த உடுமலை பழனி சாலையில் இந்த பள்ளத்தை ஒட்டி நாராயணன் காலனி குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் மழைக்காலங்களில் இந்த ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள்ளும் புகுந்து விடும். தற்போது உடுமலை வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் மூலம் உடுமலை நகராட்சி நூற்றாண்டு விழா நினைவாக கழுத்தறுத்தான் பள்ளத்தை தூர்வாரி ஓடையின் 2 புறமும் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் நாராயணன் காலனி பகுதியில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. அப்போது அந்த பகுதியில் சிலர் ஓடைப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்து, வீடுகளை விரிவாக கட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் உத்தரவின்படி நகரமைப்பு அலுவலர் கோவிந்தராஜ், கட்டிட ஆய்வாளர் பழனிகுமார் ஆகியோர் அந்த பகுதிக்கு சென்று ஆக்கிரமிப்பு செய்த இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமித்து கட்டியிருந்த 6 வீடுகளையும் அகற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *