அதிகாரிகள் மேற்பார்வையில்…. விறுவிறுப்பாக நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு….!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் கடந்த அக்டோபரில் நடைபெற்றது. அதே போல் ஆசிரியர் தகுதித் தேர்வு 2-ஆம் தாளுக்கான கணினி வழித் தேர்வு பிப்ரவரி 3-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அந்த வகையில் இந்த தேர்வானது வேலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி, தந்தை பெரியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரி, காட்பாடி கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இத்தேர்வானது காலை, பிற்பகல் என 2 வேளையாக நடத்தப்படுகிறது. கணினி வழியில் நடைபெறும் இத்தேர்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். எனினும் பலர் தேர்வு எழுதவும் வரவில்லை. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.