கோயிலில் மர்மபொருள் வெடித்து இளைஞர் ஒருவர் பலி… 4 பேர் காயம்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே  ஒரு கோயிலில் சுத்தம் செய்யும் போது மர்மபொருள் வெடித்ததில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்போரூர் அருகே மானமதி பகுதியில்  உள்ள கங்கையம்மன் கோயிலில் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து சுத்தம் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த போது கோயிலின் மேல் தளத்தில் ஒரு பை  ஓன்று கிடந்தது. இதனை கண்ட இளைஞர்கள் அதனை அங்கிருந்து எடுத்து அப்புறப்படுத்த முயற்சித்துள்ளனர்.  அப்போது அதில் இருந்த மர்மப்பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில்5 இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.

Image result for dead

உடனே செங்கல்பட்டு மருத்துவமனையில் 5 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களில்  சூர்யா என்ற ஒரு இளைஞர் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தகவலறிந்த விரைந்து வந்த மானமதி போலீசார் மர்மப்பொருளுடன் பையை கோயிலில் கொண்டு வந்து வைத்தவர்கள் யார் என்பது குறித்தும் உயிர் சேதம் ஏற்படுத்திய மர்மப்பொருள் என்ன என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.