பட்டா கத்தியுடன் பைக்கில் சென்ற இளைஞர் கைது…சென்னை போலீஸ் அதிரடி..!!

சென்னை கொடுங்கையூரில் இருசக்கர வாகனத்தில் கத்தியுடன் வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நேற்று இரவு சென்னை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் சில மர்ம கும்பல் பட்ட கத்தியுடன் வந்து அங்கிருந்தவர்களை சரமாரிய தாக்கினர். இது குறித்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் பார்வையிட்டனர். ஆனால் அனைவரும் முகத்தில் துணி கட்டிருந்ததால் காவல்துறையினரால் அடையாளம் காண இயலவில்லை. இதையடுத்து சென்னையை சுற்றியுள்ள பகுதியில் காவல்துறையினர் தீவிர பரிசோதித்தனையில் ஈடுபட்டு வந்தனர்.

Image result for பட்டக் கத்தி

இந்நிலையில் கொடுங்கையூர் எருக்கஞ்சேரி அய்யப்பா திரையரங்கம் அருகே போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் மடக்கி பிடித்த போது அவரிடம் பட்டாக்கத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கொடுங்கையூர் காவல் துறையினரிடம்  அவர்கள் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து  இளைஞரிடம் கொடுங்கையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.