லண்டனில் பெண் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை… போலீஸ் விசாரணை!

ஈஸ்ட் ஹாம் பார்கிங் வீதியில் பெண் ஒருவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

கிழக்கு லண்டன்  ஈஸ்ட் ஹாம் (East Ham) மாவட்டத்தில் உள்ள பார்க்கிங் வீதியில் நள்ளிரவு 12: 45 மணியளவில் 20 வயதான பெண் ஒருவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றனர். அதன்பின் உயிருக்கு போராடிய அப்பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். உயிரிழந்த பெண்ணின்  உறவினர்களைக் கண்டுபிடிக்க போலீசார் முயற்சி எடுத்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக இதுவரை எந்த ஒரு நபரும் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் போலீசார் தெரிவித்தனர்.