வெள்ளை மாளிகையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றி உலகையே கதிகலங்கச்செய்து வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொடிய வைரசால் அமெரிக்காவில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த  வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி சென்று விட்டது.

இந்த நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சின்  அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா  பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கேதி மில்லர் தெரிவித்துள்ளார்.

Image result for A White House employee has been coronavirus

மேலும் பாதிக்கப்பட்ட ஊழியருடன் அதிபர் டிரம்புக்கோ மற்றும் துணை அதிபர் மைக் பென்சுக்கோ நெருங்கிய தொடர்பு இல்லை என்றும் மில்லர் தெரிவித்தார். ஏற்கனவே அதிபர் டொனால்ட் டிரம்ப்  பிரேசில் தலைவர்களை சந்தித்த பிறகு, பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது. வெள்ளை மாளிகையின் கொரோனா தடுப்புக் குழுவின் தலைவரான மைக் பென்சுக்கு இன்னும் கொரோனா  பரிசோதனை நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது