லாரி மீது சுற்றுலா பேருந்து மோதி விபத்து… 25 பேர் காயம்… பெரும் பரபரப்பு…!!!!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் தாளூர் பகுதியில் நெடுஞ்சாலையில் சாலையோரம் நோட்டுப் புத்தகங்களை ஏற்றப்பட்டிருந்த லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்த லாரி மீது சிறிய சுற்றுலா பேருந்து ஒன்று மோதியது. தேசிய நெடுஞ்சாலையில் பழுது ஏற்பட்டதால் லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அந்த வழியாக வந்த பேருந்து அந்த லாரி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பேருந்தில் இருந்த தமிழக சுற்றுலா பயணிகள் 25 பேரும் காயம் அடைந்துள்ளனர். அக்கம்பக்கதினர் அவர்களை மீட்டு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply