அனைத்திலும் படுதோல்வி… மம்தா பானர்ஜி மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டார்…. பிகாஷ் ரஞ்சன் விமர்சனம்…!!!

மேற்குவங்க மாநிலத்தின் முதல்வராக மம்தா பானர்ஜி இருக்கிறார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மக்கள் செல்வாக்கை இழந்து விட்டதாக சிபிஐஎம் கட்சியின் தலைவர் பிகாஷ் ரஞ்சன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் நிர்வாகம் ஊழலால் நிறைந்துள்ளது.

பள்ளியின் ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது. இதேப்போன்று பல்வேறு துறைகளிலும் முறைகேடுகள் நடந்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டனர். ‌ இதனால்தான் சகர்திகி இடைத்தேர்தல் மற்றும் ஹால்டியா துறைமுக நிர்வாக குழு தேர்தல் என அனைத்திலும் படு தோல்வியை சந்தித்து வருகிறது என்று விமர்சித்துள்ளார்.