மெக்சிகோவில் “சுழன்றடிக்கும் அசுர வேக காற்று”அச்சத்தில் உறைந்த மக்கள்..!!

மெக்சிகோவின் ஸகாடகஸ் மாநிலத்தில் வானத்திற்கும், பூமிக்குமாய் விஸ்வரூபம் எடுத்து சுழற்காற்று வீசியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

மெக்சிகோவின் ஸகாடகஸ் (Zacatecas) மாநிலத்தில் இருக்கும் ஃப்ரஸ்னிலோ (Fresnillo) என்ற இடத்தில் கடந்த சில தினங்களாகவே காற்று மிக பயங்கர வேகத்தில் வீசி வந்தது. இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென புழுதிப் புயலும், சுழற்காற்றும் சுழன்று அதிவேகமாக வீசத் தொடங்கியது.

Image result for A tornado at Fresnillo, in the state of Zacatecas, Mexico

அப்போது சுழற்காற்றின் அசுர வேகத்தில் தூசு மண்டலம் ஒன்றிணைந்து வானத்திற்கும், பூமிக்குமாய் விஸ்வரூபம் எடுத்து மணிக்கு 112 கி.மீ   வேகத்தில் சுற்றிச் சுழன்று அடித்தது. இந்த அசுர வேக காற்று சிவப்பு மற்றும் அரக்கு நிறத்தில் நின்று சுழன்று அடித்த காற்றைக் கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சாரியமாகவும், ஒரு சில மக்கள் அச்சத்திலும் உறைந்தனர்.