அதிர்ச்சி…! திருமண விழாவில் நடனமாடிய மாணவர் திடீரென மயங்கி விழுந்து மரணம்…. கதறும் குடும்பத்தினர்…!!!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தன்னுடைய பெண் தோழியின் சகோதரியின் திருமண விழாவில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் கலந்து கொண்டார். இவர் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்தபோது திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தது பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சத்யசாய் ரெட்டி (21) என்ற மாணவர் பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வருகிறார். இவர் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார்.

அவருடைய காதில் இருந்து ரத்தம் வழிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவரின் நண்பர்கள் உடனடியாக அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு சத்யசாய் ரெட்டியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து மாணவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் இறந்த செய்தியை கேட்டு அவருடைய நண்பர்களும் பெற்று வரும் கதறி அழுதனர். மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.