மத்திய அரசின் நெல் கொள்முதல் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் தோசை ஊற்றினர். நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலையில் தமிழ்நாடு நுகர்வோர் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயி நேரடியாக கொள்முதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தேசிய கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் நெல் கொள்முதல் செய்யும் முறை கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நெல் கொள்முதல் நிலையம் அமைந்தால் அதிகாரிகளை தொடர்பு கொள்வது, பண பரிவர்த்தனை ஆகியவற்றில் சிக்கல் ஏற்படும் என விவசாயிகள் கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலையில் தோசை ஊற்றி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.