சத்துக்கள் நிறைந்த மொறுமொறு கீரை பக்கோடா !!!

கீரை பக்கோடா 

தேவையான  பொருட்கள் :

கீரை –  1 கட்டு

கடலை மாவு  – 1 கப்

பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன்

இஞ்சி விழுது – 2 டீஸ்பூன்

உப்பு  – சுவைக்கேற்ப

சீரகம் – 1/2 டீஸ்பூன்

எண்ணெய் -தேவையான அளவு

கீரை க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் கீரையை  சுத்தம் செய்து  பொடியாக நறுக்கிக்  கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் கடலை மாவுடன், கீரை, உப்பு, சீரகம் மற்றும்  சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறிக் கொள்ளவேண்டும்.  ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி மாவை  சிறிது சிறிதாக  கிள்ளிப் போட்டு பொரித்தெடுத்தால் சத்துக்கள் நிறைந்த கீரை பக்கோடா தயார் !!!